என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடைகள் அகற்றம்"
- பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
- நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
அவினாசி:
அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தது. இதனால் நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அவினாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.இதை அடுத்து தாசில்தார் மோகனன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் தாசில்தார் மோகனன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தனர். அப்போது அங்கு கடை அமைக்க வந்த சாலையோர வியாபாரிகளிடம் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதாலும், நிரந்தர கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏற்கனவே அறிவித்தபடி இங்கு சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாரச்சந்தைபேட்டைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்து சாலையோர வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக அரசு அலுவலகங்கள் முன்பாக மட்டும் கட்டில் போட்டு கடை நடத்த அனுமதிக்கப்பட்டது.
மேலும் வண்டி கடைகள், டெண்ட் கடைகள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் ஒலிபெருக்கி மூலம் சாலையோர அனைத்து வியாபாரிகளும் அதற்கென ஒதுக்கப்பட்ட சந்தைபேட்டையில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 55 பேர் பதிவு செய்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
- இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சன்னிதி தெருவில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
கோவிலை சுற்றியுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அதிகாரிகள் அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்த ரவுப்படி சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 25 கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல் வடக்கு மாட வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- பழக்கடைகளை வைத்தும், தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.
- இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
ஓசூர்,
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதான சாலையிலிருந்து அரசனட்டிக்கு செல்லும் வழி மற்றும் சிப்காட் ஹவுசிங் காலனிக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவாறு, பெட்டிக் கடைகள், சாலையோர சிறு ஓட்டல்கள், பழக்கடைகளை வைத்தும், தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.
இதனால், இப்பகுதி மக்கள் அந்த சாலைகளில் சென்று வர மிகவும் அவதிப்பட்டனர். தவிர, இந்த சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், நேற்று அந்த பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள் பிரபாகரன், குமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி,ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்படிருந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ஓசூர் மாநகராட்சி பகுதியில்,இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
- மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
- மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது
வடவள்ளி,
கோவை மருதமலை அடிவாரத்தில் சாலை இரு புறங்களிலும் பொம்மைக் கடை, பூக்கடை, பழக்கடை, மிட்டாய் கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ேதவையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர்.
இதேபோல் சாமி தரிசனம் முடித்து விட்டு வந்து, அடிவாரத்தில் உள்ள பொம்மை கடைகளில் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளையும் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் விழாக்காலங்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள்.
இதனால் மருதமலை அடிவார சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கடைகள் அனைத்தும் சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
இதனால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அடிவாரத்தில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.
இன்று மருதமலை அடிவார பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. ெபாக்லைன் எந்திரம் மூலம் கடைகள் அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணியானது நொடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரதி, சாலை ஆய்வாளர் ஜாய் சுகன்யா மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் முன்னிலையில் நடந்தது.
- சூரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- இதையொட்டி கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது, இந்த கோவிலின் அருகே சில கடைகள் கோவில் கட்டுவதற்கு இடையூறாக இருந்து வந்தது.
இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடைக்காரர்களிடம் வலியுறுத்தியும் கடைகளை அகற்றவில்லை. அதன் பிறகு நிர்வாகத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கோரி புகார் அளித்தனர்.அதன் பேரில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பால் பூத் உள்பட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
- திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகளை திடீரென்று அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மேலும் இந்த பகுதிகளில் அனுமதி இன்றி தள்ளுவண்டி கடைகளை நிறுத்தினால் வியாபாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்
திருச்சி:
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் நகர பேருந்துகள் நிற்கும் இடத்தில் பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தது.
இந்த கடைகள் வைத்திருந்த காரணத்தினால் நகர பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்த முடியாத நிலையும், நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சரியாக நடந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று திருச்சி பொன்மலை உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலும், பாவா பக்ருதீன், சுகாதார அலுவலர் ஜோதி பாசு, வினோத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீரென மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள்.
திருச்சி நகர பேருந்துகள் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் தள்ளுவண்டி கடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் அனுமதி இன்றி தள்ளுவண்டி கடைகளை நிறுத்தினால் வியாபாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு கொண்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்தியதால் அதை கண்டித்து உடனடியாக தரைக்கடை வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் எந்த முன்னறிவிப்பும் நாங்கள் நடத்தி வந்த தரைக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தான் நாங்கள் கடை நடத்தி வருகிறோம். அதிகாரிகள் எங்களை இது போன்ற நிலைக்கு தள்ளி விட்டார்கள் இதை கண்டித்து நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிலப்பரப்பில் உள்வட்ட சாலை, பறக்கும் ரெயில் வழித்தடம், கட்டிடங்கள் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து தற்போது ஏரி குட்டையாக மாறிவிட்டது. குட்டையாக காட்சியளித்து வரும் ஏரி சரிவர பராமரிக்கப்படாததால் அங்கு உரிய தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் இந்த ஏரிக்கரையோரம் ஆக்கிரமித்து இருந்த வீடுகள் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு வசித்தவர்களுக்கு முறையாக மாற்றுவீடுகள் வழங்கப்படாததால் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் மீண்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்தன.
இந்த வீடுகளுக்கு மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 47-க்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள், கிடங்குகள் ஆக்கிரமித்து விட்டன. இந்த நிலையில் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் ஏரிக்கு செல்லும் வழியில் ஆக்கிரமித்து உள்ள கடைகளை முதற்கட்டமாக அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து தாம்பரம் ஆர்.டி.ஒ. சந்திரசேகர் தலைமையில் ஆலந்தூர் தாசில்தார் பெனாடின், பொதுப்பணித்துறை அதிகாரி குஜராஜ் தேவராஜ், வருவாய்துறை, பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் அங்கு ஆக்கிரமித்து இருந்த 47 கடைகளை அதிரடியாக அகற்றினார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முன்னதாக அங்கு வந்த ஆலந்தூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் என்.லட்சுமிபதி, ஆலந்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சீராளன் உள்பட சிலர் தாசில்தார் பெனாடினை சந்தித்து ‘இங்கு உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு உரிய முறையில் மாற்று இடங்களை வழங்கிட வேண்டும்’ என்றனர்.
இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பகுதியில் 100 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் முலமாக மாற்றுவீடுகள் வழங்கப்படும். மாற்று இடம் வழங்கப்பட்டதும் ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படும்’ என்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்